என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு!
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன்
செய்தி அனுப்பு!
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லி அனுப்பு...
பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே
நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து
இரவை கொள்கிறேன்
யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ!
ஏனோ, என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ!
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ!
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு,
காதலிக்க அங்கு நேரம் இல்லையா?
இலையை போல் என் இதயம் தவறி விழுதே!!!
Its one of my favourite lyrics, and the song is very mild and nice to hear, composed by Vijay Antony. Even its a title song for a tamil serial on vijay tv, its been noticed and popular because of its unique beauty!
Check out it this in youtube : http://www.youtube.com/watch?v=6tjzeYqg5OM
Friday, December 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment