எனது நீண்ட நாள் ஆசை, தமிழில் ஒரு முறை Blog எழுத வேண்டும் என்பது. ஆனால் இதற்காக நான் கடின பட்டது ஒரு தனி கதை. ஏன் என்றால் பிற மொழியின் ஆதிக்கம் நம் மீது மிக அதிகமாக இருப்பதனால்தான். இந்த தலைபிற்க்கும், இந்த தமிழ் மொழி எழுதலுக்கும், நிறைய சம்பந்தம் உண்டு. ஏன் என்றால், தமிழும், என் உயிரின் கலந்த உறவே.
தமிழுக்கும் அமுதென்று பேர், இந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!. பாரதிதாசனின் இந்த வரிகளை படிக்கும் பொழுது, நான் மெய் சிலிர்த்து போவேன். இது போல், நமது உயிரினில் கலந்து விட்ட சில உறவுகளை பற்றி பறிமாறி கொள்ள விரும்புகிறேன்.
தாய், தந்தை, அண்ணன், தங்கை இவ்வாறு பல ரத்த சம்பந்த உறவுகளுடன், எந்த சம்பந்தமும் இல்லாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நமக்குள் ஒரு வித நிரந்தரமான அன்பையும், மாற்றத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தும் உறவுகளை எண்ணி வியக்கிறேன். அவர்கள் பல பேருக்கு அவர்களுடைய நண்பர்களாகவும், மனைவியாகவும், கணவனாகவும், காதலன், காதலியகாவும், ஏன் சில பிரபலங்கலாகவும், விளையாட்டு வீரர்களாகவும் இருக்கலாம். இவர்களுக்கு ஏதெனும், சிறு இன்னல் ஏற்பட்டாலும், நமது எண்ணம், செயல் முடங்கி அவர் பக்கமே செல்வதேன்? இவர்களை நேரில் பார்த்து பேசாமல் இருந்தால் கூட, அவர்களிடம் இருக்கும் அன்பு சிறிதும் குறையாமல் இருப்பதேன்? இவர்கள் சிறு தவறு செய்தாலும், அதனை பொருத்து, அவரை வழி நடத்தி செல்ல முடிவதென்? இப்படி பல "ஏன்" களுக்கு விடை, அவர்கள் "உயிரில் கலந்து விட்ட உறவுகள்".
கண்ணதாசனின் சில வரிகளை, இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். "ஆலம் விழுதுகள் போல், உறவுகள் ஆயிரம் இருந்துமென்ன? வேரென நீ இருந்தாய், அதில் நான் வீழுந்து, விடாதிருந்தேன்"!
Wednesday, October 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழுக்கும் அமுதென்று பேர், இந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!.
idhu Bharathidaasan paadal bharathi illa
Post a Comment