Saturday, May 23, 2009

இல்லற தவம்

இன்று கண்ணதாசன் அவர்களின் "அர்த்தமுள்ள இந்துமதம்" படித்திருக்கும்போது , ஒரு பதிவில் உத்திர பிரதேசத்தில் வாழ்ந்த ஸ்ரீ ராம்சந்தர்ஜி என்ற மகான் எழுதிய "சத்யோதயம்" என்ற புத்தகம் பற்றி குறிப்பிட்டுஇருந்தார். அதில் மனிதர்கள் வாழும் முறை பற்றியும், அவர்களுக்கு இல்லற வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் பற்றிய அனுபவங்களை வித்தியாசமாக கையாண்டு இருந்தார். அந்த பதிப்பு, மிக ஆறுதலாக இருந்தன. அவை இங்கே,

"உபத்திரவங்களும், பிரச்சனைகளும் ஜீவிதத்தில் பூரணமாக இல்லாமற் போவதென்பது நடக்காத காரியம் ; இயற்கைக்கும் மாறானது ; உண்மையில் , அவை நமது மேன்மைக்காக ஏற்பட்டவை . அவை நோயாளிக்கு ஆரோக்கியம் உண்டவாதர்க்காக கசப்பு மாத்திரைகள் கொடுப்பது போலாகும் . உண்மையில் துன்பங்களே நமக்கு மேன்மையான வழிகாட்டிகள் . அவற்றால் நமது மார்க்கம் செம்மைபடுகிறது. சாமானிய வாழ்கையில் ஈடுபட்டுள்ள் மனிதனுக்கு அவனை சரியான முறை படுத்த துன்பங்கள் மிகவும் உதவியாயிருக்கும் .

குடும்ப கஷ்டங்களையும் உலக வாழ்க்கையில் உண்டாகும் துயரங்களை பற்றி எனது குருநாதர் இப்படி சொல்வதுண்டு . ' நமது இல்லமே அமைதியும் பொறுமையும் அடைய நாம் பயிலுமிடம் . கிரகாச்தச்ரமத்தில் நாம் படும் வறுமை , இடுக்கண்களை பதறாது பொறுத்திருப்பது நாம் இயற்றும் பெரும்தவம் . இதனிலும் உயரிய தவம் வேறொன்றுமில்லை'. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் , கோபதிர்காவது , துக்கத்திர்காவது இடம்கொடாமல் , குறைகூறும் மனப்பான்மையை ஒழித்து நமது குற்றத்திற்காக நாம் அனுபவிக்கிறோம் என்று நினைத்து ,சமாதானத்துடன் பொறுமையாய் இருக்க வேண்டும். காட்டில் தனித்த வாழ்வும் , உலக விஷயங்களில் கலந்திருக்காது விலகி நிற்றலும் சிலருக்கு பொறுமையும், அமைதியையும் பழக சாதனங்களாகும் . ஆனால் நமக்கு பந்துமிதிரரின் இகழ்ச்சியும் , சுடுசொற்களும் அறிய பெரிய தவதிர்கொப்பாகி வெற்றிக்கு ஒப்பற்ற சாதனங்கள் ஆகின்றன. "

இவ்வாறு ராம்சந்தர்ஜி கூறும் கருத்துக்களை முழுமையாக ஏற்று கொண்டுள்ளார் கண்ணதாசன். நாமும் எண்ணி பார்கையில் நமக்கு ஏற்படும் துன்பங்களை ஒரு பெரிய பரிட்சையாக எண்ணி கொண்டு பொறுமை சாதித்தால், அந்த துன்பதிர்க்கே துன்பம் தரமுடியும் என்பது திண்ணம்!

No comments: