Sunday, January 25, 2009

கண்ணதாசன் வைர வரிகள்

சமீபத்தில் "சென்னை புத்தக விழா" சென்றதில் எனக்கு ஒரு பெரிய திருப்தி, கவிஞர் கண்ணதாசன் அவர்களின் "அர்த்தமுள்ள இந்து மதம்" முழு பதிப்புகளும் வாங்கியது. உயரிய கருத்துக்களை மிக எளிய நடையில், ஜனரஞ்சகமாக படைத்திருக்கிறார். அந்த பெரிய சாகரத்தில் இருந்து சில துளிகள்.

"எப்போது நீ போடும் திட்டம் தொல்வியுருகிறதோ,
அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறான்.
எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ,
அப்போது இறைவன் உனக்கும் அனுமதியளித்து விட்டான்."

"இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, ஓர் அத்மா தாக்கப்படும்போது இன்னொரு ஆத்மாவும் இயற்கையாக துடிக்குமனால், அந்த உறவே புனிதமான உறவு!, பிறப்பில் சொந்தமிருந்தாலும் சரி, இல்லாவிட்டலும் சரி, ஆக மனிதன் ஆயினும் சரி, நாய் பூனை ஆனாலும் சரி! "

"ஆயிரம் வாசல் இதயம்! யாரோ வருகிறார்கள்,
யாரோ போகிறார்கள்! வாழ்ந்தால் சிரிக்கிறார்கள்;
வரண்டால் ஒதுக்குகிறார்கள்; செத்தபின் ஒப்புகாக
அழுகிறார்கள்"

"ஞானம், பணிந்து பணிந்து வெற்றி மேல் வெற்றியாக பெறுகிறது.
ஆணவம், நிமிர்ந்து நின்று அடி மேல் அடி வாங்குகிறது"

"நாத்திகவாதம் என்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பதையும், உள் மனதின் உண்மையான உணர்ச்சி அல்ல என்பதையும் உணர்ந்தேன்."


"நன்றாக ஆராய்ந்து, "இவன் நல்லவன்தான்" என்று கண்டபின், ஒருவனை நண்பனாய் கொண்டு விட்டால், பிறகு அவன் மேல் சந்தேக படக்கூடாது, அவசரத்தில் ஒருவனை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவன் என்று கொண்ட ஒருவனை சந்தேகிப்பதும் தீராத துயரத்தை தரும்"

தொடரும்..........

3 comments:

Anonymous said...

No doubts ... Kannadasan is a legend.I got a chance to read the series "Arthamulla Indhumadham" at an odd age (12 I think).I am keeping on reading them from then, as years pass by and each time I read him I find a unique beauty and meaning for his words.

Naveen said...

Yes krithi, he's a legend... the book is a gift for everyone.

Anonymous said...

I recommend you to read the Seventh and eigth part of the series. It's very interesting and kannadasan recorded how he lived when he lived as a celebrity.