தமிழ் என்பது தொன்மையான மொழி என்பதும், அதனை யாரும் புறம் தள்ள முடியாது என்பது தான் நிதர்சனம். ஆனால் , அதனை போற்ற நமக்கு நேரம் இல்லை, ஆர்வம் இல்லை என்பது எனது வாதம். தமிழன் ஒதுக்க படுகிறான், தமிழுக்கு ஏற்பு இல்லை என்பது போன்ற எதிர் வாதங்கள். அதிலும் சிறிது உண்மை இருக்கத்தான் செய்கிறது. வழக்கம் போல ஒன்றும் இல்லாத ஒரு விஷயமாக போனது அந்த விவாதம்.
என்னை பொறுத்த வரை, தமிழ் அழிந்து கொண்டு இருக்கிறது, அதனை காப்பாற்ற வேண்டும் , என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த கூற்றெல்லாம், சூரியன் ஒரு நாள் அழிந்து விடும் என்பது போல அர்த்தமற்ற பயமாகும். தமிழ் நமது தாய் மொழி, அதனை மறக்க கூடாது. அவ்வளவுதான் !ஆனால், ஒரு சாதாரண மனிதனாக, மேலும் தமிழுக்கு என்ன செய்து விட முடியும் என்ற கேள்விக்கு, என் மனத்தில் தோன்றிய பதில்கள் இங்கே.
- தினம் ஒரு திருக்குறள் படிக்கலாம்.
[http://www.dinamalar.com/kural_main.asp]
- தினம் ஒரு தமிழ் சொல்லுக்கு நிகரான ஒரு ஆங்கில சொல் தேடலாம்.
[http://www.tamildict.com/english.php]
- தினம் சில நேரம், பழைய தமிழ் பாடல்களை கேட்கலாம்.
[http://www.oldtamilsong.net/]
- முடிந்த வரை வீட்டிலே தமிழ் சொற்களை பயன் படுத்தலாம்.
- தினம் ஒரு தொழில்நுட்ப வார்த்தைக்கு, தமிழ் நிகர் வார்த்தை காணலாம்.
[http://www.tamilnation.org/literature/TamilTechnicalDictionary.pdf]
- ஆதி தமிழர் வாழ்ந்த வாழ்க்கை முறை ஒன்றை பெரியவர்களிடம் கேட்டறியலாம்.
- தற்போது மக்கள் தொலைக்காட்சி, முறையான தமிழ் நிகழ்ச்சிகளை நடத்துகிறது, அதனை காணலாம்.
[http://makkal.tv/tamilviewprogram.aspx]
- தமிழ் இலக்கியங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். [http://tamilnation.org/books/index.htm]
[நேரம் கிடைக்கும் போது, இந்த பத்தியினை மேலும் நிகழ்நிலை படுத்துவேன்]
இவை அனைத்தையும் நம்மோடு நிறுத்தி விடாமால், சந்தர்ப்பம் கிடைக்கும் போது, பிறருக்கும் பரிமாறி கொள்ளலாம். இணையம் வழியாக இவை அனைத்தும் சாத்தியமே!
முடிவில், தமிழை வளர்ப்பதற்கு அது ஒரு செடி அல்ல! அது ஏற்கனவே நன்கு வளர்ந்து, படர்ந்து, காய்ந்து, கனிந்து பூத்து குலுங்குகிற ஒரு விருட்சம் போன்றது. அதன் நிழலில் இளைப்பாறி , நீர் ஊற்றி அரவணைத்தால் போதும்.
தமிழுக்கு பொறுமை அதிகம், என்பது சத்தியம்!
அதன் பொறுமை அதனை வழி நடத்தும் , என்பது நிச்சயம்!!
No comments:
Post a Comment