நான் ஆனந்த விகடனின் நிரந்தர வாசகன். அதன் தமிழ் சேவை மிகுந்த பாராட்டுக்கும், கவனத்திற்கும் உரியது. இலங்கை பிரச்சனை உச்ச கட்டம் அடைந்த நாள் முதல்,ஒரு பாரம்பரிய தமிழ் இதழாக அதன் கடமையை திறம் பட செய்து கொண்டிருக்கிறது. அதன் ஒவ்வொரு இதழிலும், இலங்கை போர் சம்பந்த பட்ட பதிவுகள் இடம் பெற்றிருந்தது. அவ்வாறு நான் வாசித்த பல சம்பவங்களில் இரு சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தது, அதனை இங்கே பரிமாற வேண்டும் என்று தோன்றியது.
முதல் சம்பவம், இலங்கையில் வாழும் தமிழர் பகுதியில் உள்ள பதுங்கு குழிகளை பற்றியது. போர் விமானங்களின் தாக்குதலில் இருந்தும், பீரங்கி குண்டுகளின் பிடியில் இருந்து தப்பிக்க பொதுவாக எல்லா இடங்களிலும் பூமியின் அடியில் ஆளுயர குழிகள் அமைக்க பெற்றிருக்கும். அவ்வாறு ஒருதமிழ் குடும்பம் காட்டின் மத்தியில் பதுங்கு குழி அமைத்து சிறிது தொலைவில் அவர்கள் தங்க குடிசை அமைத்து உள்ளனர். பிள்ளைகள் விளையாடி கொண்டிருக்க தாயும் தந்தையும் நகரத்திற்கு சென்று, அன்றைய உணவிற்காக பொருட்களை வாங்கி வந்தார்கள். சமையல் ஆனா பிறகு பிள்ளைகளை அழைத்து பரிமாற உட்காரும் சமயம் , திடீரென வான் வழி தாக்குதல் நடத்தியது இலங்கை இராணுவம். பிள்ளைகளையும், கணவனையும் ஆயத்த படுத்தி பதுங்கு குழி சென்று அடைய கூறி, தான் இந்த உணவு பொருட்களை பத்திர படுத்தி விட்டு வருவதாகும் கூறினால் அந்த தாய். அவர்களும் பதுங்கு குழிக்குள் சென்று அடைந்த நேரம், தாயின் மீது குண்டுகள் பாய்ந்து அந்த பிள்ளைகள் கண் முன்னே அங்கேயே பிணமானால் அந்த தாய். அடுத்த வேலை தன் பிள்ளைகளுக்காக உணவை பத்திர படுத்தாமல், அவளும் பதுங்கு குழிக்கு சென்று இருந்தால் அவளும் காப்பாற்ற பற்றிருக்கலாம்.
அடுத்த சம்பவம், பொதுவாக போரால் பாதித்த பகுதிகளில் செஞ்சிலுவை இயக்கத்தை சார்ந்தவர்களை பாதிக்க பட்டவர்களுக்கு சேவை செய்ய அனுமதிப்பது உண்டு. அவ்வாறு ஒரு சிறிய கிராமம் ஒன்றில் முதலுதவி அளித்து கொண்டு இருந்த மருத்துவர் கூறிய சம்பவம் இது. இலங்கை இராணுவம், சில இக்கட்டான சூழ்நிலையில் செஞ்சிலுவை இயக்கத்தை சார்ந்தவர்களையும் வெளியேற்றியது உண்டு. அப்போது அந்த மருத்துவர், அந்த சிறிய மருத்துவமனையில் அனைவர்க்கும் முதலுதவி செய்து கொண்டிருக்கும் சமயம் சிறிது தூரத்தில் பெரிய சத்தத்தோடு பீரங்கி தாக்குதல் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்தார். அப்போது அங்கு வந்த இலங்கை ராணுவத்தை சேர்ந்த சிலர் மருத்துவமனையை தாக்க போகதாகவும் மருத்துவர் மற்றும் அங்கு இருக்கும் செவிலியர் அனைவரையும் வெளியேறுமாறு எச்சரித்தனர். பல முறை முயன்றும், வேறு வழி இல்லாமல் அங்கிருந்து அந்த மருத்துவர் வெளி வரும் நேரம் , அங்கு சிகிச்சை பெற்று கொண்டிருந்த பாதிக்கப்பட்ட தமிழர்கள், அவருக்கு நன்றி கூறி, பத்திரமாக சென்று வர சொல்லி வழி அனுப்பி வைத்த காட்சி அவரை கண்ணீர் விட வைத்ததாம். அங்கிருந்து வெளியேறி தன் தாய்நாடு திரும்பிய பிறகும், பல முறை குற்ற உணர்ச்சியால் தான் மனம் வருந்தியதாகவும், அங்கு அவர் கண்ட காட்சி, மக்கள், அவர்கள் கண்ணீர் அவ்வபோது அவர் கனவிலும், நினைவிலும் வந்து மன வேதனை ஏற்படுத்தி சென்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு பல பதிவுகள், நிகழ்வுகள். ஆனால் அவர்கள் நிலை இன்னும் மாறவில்லை.
காலம் வந்து பதில் சொல்லும் என்று நாம் கொண்ட நம்பிக்கைகளுக்கு, இப்போது காலன் வந்து பதில் சொல்வது என்பது, இறைவன் மீதுள்ள நம்பிக்கையையே சற்று குலைக்க வைக்கும் சம்பவங்கள்.
Saturday, February 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment