Saturday, April 18, 2009

எனக்கு மட்டும் அல்ல!

அவள் உடம்பெல்லாம்,என்னை ஈர்க்கும் காந்தம்,
கண்கள் தாங்கும் முகம் மிளிரும் சாந்தம்,

என் பசி, என் தூக்கம் அவள் தலையாய கடமை
இவை மட்டும் அல்ல,

சில நாட்கள் பழகிய நட்பில், அனுதினம்
ரொட்டி துண்டுகள் கேட்க்கும் காக்கை.

நெடும் பயணம் முடிந்து வரும் நேரம்,
முகம் வாடி, தண்ணீர் வற்றிய செடிகள்.

உணவளிக்க நான் மறந்த வேளையில்,
தொட்டியோரம் எட்டி பார்த்த வண்ண மீன்கள்.

ஒரு நாள் வாழைப்பழம் தின்ற உரிமையில்,
வாசல் கதவு முட்டி வெறித்து நிற்கும் மாடு.

தெருவோர நாய்கள் தினம் இரவு பசியாறும்,
திருட்டு பூனை இவள் அணைப்பில் இதம் காணும்.

தண்ணீர், அன்னம் இவை நாடி எதிரியே வந்தாலும்,
இவள் தன் சேவை செய்ய மறுக்க மாட்டாள்.

இவள்
என் தாய், எனக்கு மட்டும் அல்ல!

No comments: