Thursday, April 9, 2009

இதயம் வருடிய வரிகள்

நாம் நிறைய திரை பாடல்கள் கேட்பதுண்டு. அதில் சில வரிகள் மட்டும், நம்முடன் பல நாட்களாக ஒட்டி கொண்டு, நம் உதடுகளுக்கும் மனதிற்கும் இடையே முட்டி கொண்டு இருக்கும். எனக்கும் இது போல பல பாடல் வரிகள் ஈர்த்தது உண்டு.

அதில் சில,

"உலகத்தின் கடைசி நாள் இன்று தானோ என்பது போல் பேசி பேசி தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே!"

"வேறை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை, அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும். மரமாய் நானும் மாறேனோ, என் மனித பிறவியில் உய்யேனோ! "

"மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட ஆசையடி! நம்மாசை எரித்து நார் நாராய் கிழித்து முள்ளுக்குள் எரிந்தது காதலடி!"

"தாகம் என்று சொல்கிறேன் மர கன்று ஒன்று தருகிறாய், பசிகிரதென்று சொல்கிறேன் நெல் மணி ஒன்றை தருகிறாய்"

"என்னோடு வா வீடு வரைக்கும், என் வீட்டை பார் , என்னை பிடிக்கும்.இவள் யாரோ யாரோ தெரியாதே, இவள் பின்னால் நெஞ்சே போகதே"

"வெளியே சொல்லா ரகசியமாய் என் நெஞ்சில் உறுத்துகிறாய் நீயே, சொல்லாமல் நான் மறைத்தாலும் என் கண்ணின் மணிகள் என்னை காட்டி விடும். "

"உன் உதடுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை, அதை சொல்லி விட்டால் தொடங்கும் எந்தன் வாழ்க்கை. உன் மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள், காதல் என்றால் பெண்ணே சாதல் என்று சொல்ல!"

"கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும், ஒரு வண்ண கவிதை காதல் தானா, ஒரு வார்த்தை இல்லையே, இதில் ஓசை இல்லையே, இதை இருளிலும் படித்திட முடிகிறதே!"

"பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும், பாட்டு உன் காதிலே நீரை வார்க்கும். உடல் பூமிக்கே போகட்டும். இசை பூமியை ஆளட்டும். "

"பூவரச இலையிலே பீப்பி செஞ்சி ஊதினோம், பள்ளிகூட பாடம் மறந்து பட்டாம்பூச்சி தேடினோம். தண்ணி பாம்பு வரப்பில் வர - தலை தெறிக்க ஓடினோம். அடடா வசந்தம் அதுதான் வசந்தம். மீண்டும் அந்த காலம் வந்து மழலையாக மாற்றுமா?"

தொடரும்!

2 comments:

Krithiha said...

Heyy that was a nice collection Naveen... The one from Ullam Ketkumey (Namaasai kilithu naar-naarai..) is in the top of my favs too..

Naveen said...

hmm yes... its my favourite too! nambaloda ematrangalai prathabalikara mathiri irukkum antha words... :)